சுவைத் தமிழின் மூதறிஞர் – கடவூரார் கவிதையும் தமிழ்ப்பாவை  முன்னுரையும்

(திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – அணிந்துரை-தொடர்ச்சி) சுவைத் தமிழின் மூதறிஞர் மறைமலையார் பாவாணர் அடிச்சுவட்டில் மாண்பார்ந்த தனித்தமிழ்க்குப் பெருமை சேர்த்த நிறைபுலமை யாளர்நம் பழனிவேலர் நினைவெல்லாம் மொழிமானம் தாங்கி நிற்கும் குறையில்லாப் பெருங்கொள்கை யாளர்! அந்நாள் கோதறுசீர் ‘மாணாக்கன்’ இதழின் மூலம் முறையான தமிழ்த்தொண்டு புரிந்த நல்லார்! மூப்பினிலும் தமிழ்யாப்பின் மரபில் வல்லார்! உரமுடையார்! திறமுடையார்! தமிழைக் காக்கும் உணர்வுடையார்! போர்க்குணமும் உடையார்! நெஞ்சில் கரவறியார்! செந்தமிழைக் காப்ப தற்குக் களம்புகுவார்! தன்னலத்தைச் சிறிதும் எண்ணார்! வரவறியார்! பொருள்சேர்க்கும் வாழ்வைக் காணார்! வாழ்வுவளம் எல்லாமுமு்…

திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – அணிந்துரை

முனைவர் ப.தமிழ்ப்பாவை தொகுப்பில் திருத்துறைக் கிழார் கட்டுரைகள் அணிந்துரை வை.மு.கும்பலிங்கன்    திருத்துறைக்கிழார் எழுதிக் குவித்த எழுத்துகளாம் பூந்தோட்டத்தில் காய், கனித்தோப்பில் புகுந்து, சுற்றிப்பார்த்தும், உண்டு மகிழ்ந்தும் களிப்போம். இவர், தாம் உருவாக்கிய எழுத்து என்னும் கருத்துத் தோட்டத்தை 1.தமிழ், 2.தமிழர், 3.தமிழ்நாடு என மூவகைப்படுத்தி, சுற்றுவேலி கட்டி அமைத்துள்ளார். தமிழ்த் தோப்பில் 14 கட்டுரைகளும், தமிழர் தோப்பில் 19 கட்டுரைகளும், தமிழ்நாட்டுத் தோப்பில் 9 கட்டுரைகளுமாக மொத்தம் 42 கட்டுரைகளைத் தொகுத்து அவர்தம் மகளார் முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை இங்கு  தந்துள்ளார். தற்போது, இத்தோப்பின்…