வெருளி நோய்கள் 1141-1145: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1136-1140: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1141-1145 செவ்வாய்க் கோள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் செவ்வாய்க் கோள் வெருளி.கணியம் அல்லது சோதிடம் என்பது உண்மையானால் செவ்வாய்க்குரிய நற்பலன்கள் மீதும் நம்பிக்கை வரவேண்டும்.ஆனால் பணத்தைக் கறப்பதற்காகச் “செவ்வாய் எப்போதும் தீமைகளையே கொடுப்பார். செவ்வாய்த் திசை வந்தால் துன்பங்களும், இன்னல்களும் நேர்ச்சிகளும்(விபத்துகளும்) வந்து சேரும்” என்றும், “செவ்வாய்க் கோளானது அது அமர்ந்த வீட்டுக்கும் அது தொடர்பு பெற்றிருக்கும் இடங்களுக்கும் மிக மோசமான பாதிப்பை உண்டாக்கும்” என்றும் சொல்கின்றனர். இதற்குக் கழுவாயாக/பரிகாரமாக ஏதேனும் செய்வதாகச் சொல்லிப் பணம்…

உ. இந்த அடிமை வாழ்வு தேவைதானா? எண்ணிப் பார் தமிழகமே! – திருத்துறைக் கிழார்

(க. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் – தொடர்ச்சி) தமிழ்நாடு உ. இந்த அடிமை வாழ்வு தேவைதானா? எண்ணிப் பார் தமிழகமே! தமிழ்நாட்டுச் சட்டப்பேரவை, அமைச்சரவை பெயரளவில்தாம். தமிழ்நாட்டிற்குகந்த சட்டங்கள் தொகுத்து நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இல்லையே! இந்திய தரப்பு, பாரத நடுவணரசுக்கு அனுப்பி தலைவர் ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைப்படுத்தலாம்.தமிழக அரசு இந்திய அரசின் போக்குக்கு மாறாகச் செயல்பட்டால், உடனே கலைக்கப்படும். இப்படித்தான் நான்கு முறை தமிழ்நாட்டரசு கலைக்கப்பட்டது.தமிழக அரசு தில்லி அரசின் ஆணைக்குப் புறம்பாகச் செயல்படுகிறதா? என்று கண்காணிக்க நடுவணரசு ஓர் ஆளுநரை அமர்த்தியுளதறிக.தமிழ்நாட்டில்…

3 ] தமிழ்நாடு ,    க. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்

  (க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப்    போகிறாய்? – தொடர்ச்சி) தமிழ்நாடுக. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தமிழ்நாடு மூவேந்தர்களால் ஆளப்பட்ட காலத்தில் இற்றை நாள்போல் அரசியல் கட்சிகளோ சமூகச் சீர்திருத்க் கட்சிகளோ இருந்ததாகச் சான்றுகள் எவையும் இலலை. ஏனெனில், அன்று அரசர்கள் மக்கள் நலனே தங்கள் நலன் எனக் கருதிய காலம். மக்களும் ‘மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம்’ எனக் கருதி வாழ்நதனர்.சங்க காலத்திற்குப் பிறகு ஆண்ட அரசர்கள் ஆட்சிப் பொறுப்பைப் பொருட்படுத்தாமையால் அமைச்சர்களே சிலர் முற்பட்டு ஆட்சியைக் கைப்பற்றி ஆளத்தொடங்கினர். அப்போதுதான் மக்களிடையே அரசப் பற்றின்மை…

கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை : திருத்துறைக் கிழார்

(கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா! – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்ஆ.தமிழர் கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை ஆரியர் வருகையால் தமிழ் மொழி சிதைந்தது; தமிழர் பண்பாடு மறைந்தது; தமிழர் கணக்கியல் முறை தகர்ந்தது; தமிழர் காலம் கணக்கிடும் முறையும் ஒழிந்தது. இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் கரணியம் தமிழரின் அயல்மொழி, அயல்நாகரிகத்தின்பால் உள்ள ஆசையும், தமிழரின் ஏமாளித்தனமும் எனலாம். இன்றும் அந்நிலையே நீடிக்கிறது.ஏதோ அத்திபூத்தாற்போல, ஆரணி பாண்டுரங்கன் (பெயர் தமிழன்று) போன்ற சில உணர்வாளர் மறைந்தும், மறந்தும் போன தமிழர் நாகரிகம், பண்பாடு, வாழ்வியல் முறைகள்…

கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா!-திருத்துறைக் கிழார்

(க௬. தமிழர் செய்ய வேண்டுவன?- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்ஆ.தமிழர் கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா! இலங்கையின் மக்கள் தொகை நூற்று எழுபது இலக்கம். அதில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை இருபது இலக்கம். சிங்களர் அரசு 1980 – ஆம் ஆண்டு தமிழின அழிப்புப் பணியில் இறங்கி, பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது. ஆண், பெண், சிறார் என்ற வேறுபாடு கருதாது நூழிலாட்டு நடத்தியது. ஈழத்தில் தங்கட்கு விடுதலை வேண்டிப் போராடிய தமிழர் நான்கு பிரிவினராவர். அவர்களுள் விடுதலைப்புலிகள் தீவிரமாகச் செயல்பட்டனர். இக்குழுவினர்க்குத் தலைவர்…

கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3: திருத்துறைக் கிழார்

(கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3 ஆயின், ஆப்பிரிக்காவில் வாழும் ‘இந்தி’யர், அமெரிக்கா, இங்கிலாந்து முதலான அயல்நாடுகளில் உறையும் இந்தியர் (வடநாட்டார்)க்கு ஓர் இடர் என்றால் இந்திய அரசு எதிர்ப்புக்குரல்  எழுப்புவதும் குற்றமன்றோ? இராசீவு காந்தியின் இறப்பைச் சாக்காக வைத்து தமிழ்மக்களின் விடுதலை உணர்வையும், உயிரையும், பொருட்படுத்தாமல் மானங்காக்க, உரிமைபெறப் போராடும் ஈழத்தமிழரின் வீர உணர்வையும் மழுங்கடிக்க இந்திய அரசும், தமிழக அரசும் பாடுபடுவது நன்றன்று. இதனை முன்வைத்து…

கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: திருத்துறைக் கிழார்

(கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3 இலங்கை அரசுடன் இந்தியா உடன்படிக்கை இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டகாலத்தில் தமிழ்நாட்டிற்குரிய கச்சத்தீவு இலங்கையரசிடம் விடப்பட்டது. தமழக அரசு வடவரக்கு அடிமையாயிருப்பதால் தட்டிக்கேட்கத் துணிவில்லை. கேட்டால் பதவி பறிபோகும்!  ஈழ விடுதலைப்புலிகள் போராட முற்பட்டனர். ஈழத்தமிழர் இளைஞர் பலர் படையில் சேர்ந்தனர். சிங்களர் அரசுடன் போர் தொடங்கினர். சிங்களர் திணறினர். இலங்கையரசால் தாக்குப் பிடிக்கவியலவில்லை. அமெரிக்கப் படைகள் தங்க இலங்கையில் இடமளிக்க முடிவு செய்தது…

கரு. தடைச்சட்டமும் தமிழினமும் 1/3: திருத்துறைக் கிழார்

(க௪.  தமிழர் என்றும் ‘இந்தி’யை ஏற்கமாட்டார் – திருத்துறைக் கிழார் : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3 தமிழக அரசு இன்று (28.01.1992) பயன்படுத்தும் தடைச்சட்டத்தைத் ‘தடா’ என்று இந்தியில்++ சொல்கின்றனர். ‘தடா’ என்றால் தடைசெய்யாத என்று தமிழில் பொருள்படும். ‘இந்தி’ தான் தமிழுக்கு எதிரியாயிற்றே! 21.05.1991 அன்று 10.50 மணிக்கு திரு மரகதம் சந்திரசேகரன் போட்டியிட்ட திருப்பெரும்புதூர் தொகுதிக்குத் தேர்தல்  பொழிவுக்கு திரு. இராசீவு காந்தி வந்தபோது மாலையில் வெடிவைத்துக் கொல்லப்பட்டார். அதன்…

க௪.  தமிழர் என்றும் ‘இந்தி’யை ஏற்கமாட்டார் – திருத்துறைக் கிழார்

(க௩. போலித் தமிழர் – திருத்துறைக் கிழார் : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர்க௪. தமிழர் என்றும் ‘இந்தி’ யை ஏற்கமாட்டார் வடஇந்தியர் “தேசிய ஒருமைப்பாடு, தேசிய மொழி பாரதம் ஒரே நாடு” என்றெல்லாம் பேசி இலக்கிய இலக்கணமற்ற, தனக்கென்று எழுத்தில்லாத எண்ணூறு ஆண்டுக்குள் தோன்றிய பண்படாத மொழியாகிய “இந்தி” மொழியை இந்தியத் தேசிய மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் ஆக்குவதற்கு முனைந்து செயல்பட்டு வருகிறார்கள்.தென் மாநிலங்களின் மக்கள் இந்தியை ஏற்க அணியமாயில்லையாயினும், பேராயக் கட்சியினர் ஆட்சி புரியும் மாநிலங்களில் தற்பொழுது மும்மொழிக் கொள்கையை…

க௩. போலித் தமிழர் – திருத்துறைக் கிழார்

(கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே!  – திருத்துறைக்கிழார்- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் க௩. போலித் தமிழர் இன்று  தமிழ் நாட்டில் பலவகையான மக்கள் வாழ்கின்றனர். கிறித்தவர், இசுலாமியர், இந்துக்கள், சமணர், சீக்கியர், பௌத்தர் முதலிய மதத்தினரும், முதலியார், நாயக்கர், இரெட்டியார், நாயுடு, மராட்டியர், வேளாளர், தேவாங்கர், வன்னியர், கள்ளர், மறவர், நாடார், கௌடர், படையாட்சி, பள்ளர், பறையர், அம்பலக்காரர், முத்தரையர், பார்ப்பனர் முதலிய பல குலத்தினரும், தெலுங்கர், மலையாளர், கன்னடர், தமிழர், ஆங்கிலர், இந்தியர், மராட்டியர், சௌராட்டிரர், குசராத்தியர், சமற்கிருதர்…

கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே!  – திருத்துறைக்கிழார்

(கக. வழக்கில் வழுக்கள் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! இலங்கையில் ஈழத்தமிழர்களைச் சிங்களவர் 1983 – ஆம் ஆண்டு செய்த படுகொலையைப் பார்த்தும் இலங்கை அரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டு அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி தமிழ்மக்களைக் கொடுமைப்படுத்தியது முறையா? தமிழ்நாட்டு மீனவர்கட்குப் பயன்பட்ட கச்சத்தீவை இலங்கையரசுக்குக் கொடுத்துத் தமிழக மீனவர்கட்கு இடையூறு செய்தது சரியா? ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் அடைக்கலம் அடைந்தனர். அவர்களை நன்முறையில் நடத்தாமல் அவர்கள் தமிழ்நாட்டில் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடபடுவதாகக் குற்றம்…

கக. வழக்கில் வழுக்கள் – திருத்துறைக்கிழார்

( க0. 1938 – ஆம் ஆண்டு தொட்டு இன்றுவரை   நீடித்துவரும்‘இந்தி’ எதிர்ப்பினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட  நன்மை, தீமைகள் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கக. வழக்கில் வழுக்கள் எழுவாய் தமிழ் மொழி தோன்றிய காலவரையறை இன்னும் தமிழறிஞர்களால் கணிக்கவியலாத புதிராயுளது. உலக மொழிகள் யாவற்றினும் முதல் தாய்மொழியும் தமிழே என மொழி ஆராய்வாளர் மொழிகின்றனர். அத்தகு மொழி, மூவேந்தர்களாகிய சேர – சோழ – பாண்டியர்களால் சீராட்டிப் பாராட்டி வளர்க்கப்பெற்றது. பாண்டியப் பேரரசு, முத்தமிழ்க் கழகங்கள் மூன்று கண்டு – தமிழைப் பேணிற்று. அவர்கள்…