பெரியார் நோக்கில் திருக்குறள் – மு.இரத்தினம்
பெரியார் நோக்கில் திருக்குறள் பெரியாரின் பெரும் பாராட்டைப் பெற்ற ஒரே நூல் திருக்குறள். தன் பாராட்டுக்கான காரணங்கள் பலவற்றை அவர் அடுக்குகிறார். அவற்றுள் சில: திருக்குறள் பாமரர்க்குப் புரிவது, அறிஞரும் ஏற்பது. வள்ளுவர்க்கு யாரும் ஞானப்பால் ஊட்டவில்லை. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என வருணாசிரமத் தருமத்தை எதிர்க்கிறது. உயிர்ப்பலியிடும் வேள்வியை எதிர்க்கிறது. அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள் அதிகம் இல்லை. ஒழுக்கத்தை வலியுறுத்துகிறது. மூடநம்பிக்கை இல்லை. மனிதச் சிந்தனைகளுக்கு எதிரான மத ஆதிக்கக் கருத்து இல்லை. ‘பிராமணன்’ என்ற சொல் கையாளப் படவில்லை. மேலும்,…