கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 53 : மூதாட்டி தன் வரலாறுரைத்தல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 52 : அதிகாரம் 11. ஏடு பெற்ற காதை – தொடர்ச்சி) பூங்கொடி மூதாட்டி தன் வரலாறுரைத்தல் வந்தவள் மகிழ்ந்துதன் வரலா றுரைக்கும்;‘முந்திய தமிழ்மொழி தந்தநல் இலக்கியச்செல்வம் பற்பல சிதைந்தும் குறைந்தும்புதைந்து கிடப்பவை புகுந்து புகுந்து அப்புதைபொருள் தேடும் பணியினைப் பூண்டேன்,நல்லநல் லேடுகள் நனிவரப் பெற்றும்அல்லும் பகலும் செல்லும் சிதலும்சுவைத்துச் சுவைத்துச் சோர்ந்தபின் எஞ்சியகுறைபடும் ஏடுகள் குவிந்தன அந்தோ!தமிழுக் குறுபகை எத்தனை தாயே!அமுதத்தமிழே! அன்னாய்! வாழி!அவையெலாம் திரட்டி அரியதோர் நூலகம்நவையற நிறுவி நடத்துதல் என்பணி,நாவலூர் அமுதம் என்றெனை நவில்வர்;…