(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 09 இறையனார் அகப்பொருள் உரை -தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 7. மெய்ம் மலிந்து நகைத்தேன் காடு சூழ்ந்த மலைநாட்டு மகன் ஒருவன், குறவர் குடிக் குமரி யொருத்தியைக் கண்டு காதல் கொண்டான். தங்கள் குலக் கடவுளாகிய முருகன் உறைவதால் பெருமைப் பெற்ற மலை உச்சியில் தோன்றிய அவன் நாட்டு அருவிகள், கீழே பாய்ந்து அவன் நாட்டுக் காட்டை வளமுறச் செய்வது போலேவே, ஆற்றல் அருள், முதலிய அரிய பண்புகளால் சிறந்த பெரியோனாய அவன், தன்பால் பேரன்பு…