காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 2/4 – முனைவர் சான் சாமுவேல்
(காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¼ –தொடர்ச்சி) காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 2/4 1856-இல் தென்னிந்தியாவில் பேசப்படும் ஒன்பது மொழிகளைத் திராவிட மொழிக்குடும்பமாக இனங்கண்ட காலுடுவெல் தமது இரண்டாவது பதிப்பில், அஃதாவது 1875-இல், மேலும் மூன்று மொழிகளையும் இணைத்து 12 மொழிகளைத் திராவிட மொழிகளாக இனங்கண்டு காட்டினார். இன்று திராவிட மொழிகளின் எண்ணிக்கை 35-ஐத் தொட்டுள்ளது. வட இந்தியாவில் பேசப்படும் பிராகுயி போன்ற சில மொழிகள் திராவிட மொழிகளின் பட்டியலில் இணையவே தென்னிந்திய மொழிகளாகத் திராவிட மொழிகளை நோக்கிய பழைய குறுகிய பார்வை பரந்து விரிந்து…