(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 15, அரிதாகும் அவன் மார்பு!-தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி 13. வள்ளுவர் காட்டும் வழி  “தமிழனுக்கு உள்ள ஒரு சிறப்பு அவன் அங்கு சென்றாலும் தமிழ்க் கலாசாரத்தைப் பரப்புவது ஆகும். கடல் கடந்து சென்று தமிழன் பரப்பிய கலாசாரத்தின் சுவடுகள் இன்று உலக நாடுகள் பலவற்றில் காணப்படுகின்றன. மது வருந்துவதும், மங்கையரோடு கூடி இன்பம் துய்ப்பதுமே வாழ்வு என்று இருந்த நாகர்களுக்கு, பழத்தமிழன் ஒருவன் மதுவும் மங்கையும் பெற்று வாழ்வது வாழ்வாகாது என்று தமிழ்நாட்டு அறம் போதித்து அவர்களை…