(அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 4. கண்டதும்கேட்டதும், 5. கொள்ளும் குத்துவெட்டும், 6. தூங்கு மூஞ்சிகள்-தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 7. பொன்னும் பொரி விளங்காயும் ஒரு கிழவன் தான் தேடிய சிறு பொருளைத் தானும் உண்ணாமல், பிறர்க்கும் வழங்காமல் பொன்கட்டியாக, பொரிவிளங்காயளவு உருட்டி, அடுக்குப் பானை இருக்கும் இடத்தின் அடியில் புதைத்து வைத்திருந்தான். அவன் மக்களிடமும்கூட இதைச் சொல்லி வைக்கவில்லை. சொன்னால் சொத்துப் பறிபோய்விடும் என்பது அவன் கருத்து. திடீரென ஒரு நாள் நோய்வாய்ப்பட்டான். படுத்து விட்டான்….