வெருளி நோய்கள் 494-498: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 489-493: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 494-498 எதிரொளிப்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் எதிரொளிப்பு வெருளி.கண்ணாடி தவிர, நீர்ப்பகுதி, பளபளப்பான பகுதி முதலிய பிறவற்றில் எதிரொளிப்பது குறித்து மிகை பேரச்சம் கொள்கின்றனர்.00 எதிர்காலம் குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வது எதிர்கால வெருளி.பேரிடர், நேர்ச்சி போன்றவற்றால் யாரையோ எதையோ இழந்தவர்களுக்கு எதிர்கால வெருளி மிகுதியாக வருகிறது.எதிர்காலம்பற்றிய அச்சம், நம்பிக்கையின்மை, தன்னம்பிக்கையின்மை போன்றவற்றால் எதிர்கால வெருளிக்கு ஆளாகின்றனர்.00 எதிர்ம எழுது பலகை(boogieboard) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் எழுது பலகை வெருளி.எதிருரு ஒளிர்வுக் காட்சி முறையில் எழுதப்பெறும்…

வெருளி நோய்கள் 489-493: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 484-488: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 489-493 எட்டின் கூறுகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் எட்டின் கூறு வெருளி.எட்டாம் எண் வெருளி உள்ளவர்களுக்கு எட்டின் கூறு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00

வெருளி நோய்கள் 431-435 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 426-430 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 431-435 உயிரிய மணிப்பொறி (biological clock) தொடர்பான அளவுகடந்த கவலையும் பேரச்சமும் உயிரிய மணிப்பொறி வெருளி00 432. உயிருடன் அடக்க வெருளி-Subterraneapremortephobia உயிருடன் அடக்கம் செய்யப்படுவோமோ என்ற பெருங்கவலையும் பேரச்சமும் உயிருடன் அடக்க வெருளி.இதை முதலில் உயிருடன் புதைதல் வெருளி எனக் குறித்திருந்தேன். ஆனால் புதைவு வெருளி எனத் தனியாகக் குறித்துள்ளதால் இவ்விரண்டிற்கும் குழப்பம் வரக்கூடாது என்றே உயிருடன் அடக்கம் வெருளி என இப்போது குறித்துள்ளேன்.Subterranea நிலத்தடி எனப் பொருள்; premorte என்றால் இறப்பிற்கு முன்…

வெருளி நோய்கள் 421-425 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 416-420 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 421-425 உதைபந்தாட்டம்(soccer) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உதைபந்தாட்ட வெருளி.இதனைக் காற்பந்து வெருளி(footballphobia) என்றும் சொல்வர்.ஆடுபவர்களில் சிலருக்கு அல்லது வேடிக்கை பார்ப்பவர்களில் ஒரு சாராருக்குப் பந்து தங்கள் மீது பட்டுக்காயம் ஏற்படலாம் என்ற பேரச்சம் வரலாம். இதனால் ஆட்டத்தின் மீதே வெருளி வரும்.00 உந்து ஒலிப்பான்(horn) குறித்த வரம்பற்ற பேரச்சம் உந்து ஒலிப்பான் வெருளி.Keras என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் கொம்பு. கொம்பு என்பது பின்னர் ஊது கொம்பையும் இசைக் கொம்பையும் குறித்தது. ஊர்திகள் பந்த பின்னர்…

வெருளி நோய்கள் 416-420 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 411-415 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 416-420 உண்ணுகை குறித்த வரம்பற்ற பேரச்சம் உண்கை வெருளி.உண்ணும் பொழுது அருகில் அல்லது சுற்றுப்புறத்தில் யாரேனும் காற்றை வாய்வழியாகவோ பின்வழியாகவோ வெளியேற்றும் பொழுது உண்பதை வெறுத்துப் பேரச்சம் கொள்வதும் இவ்வகைதான். உண்ணும் பொழுது வாய்வழியாக மூச்சு விடுவதும் உண்கை வெருளிதான்.00 உண்டியகம்(cafeteria) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் உண்டியக வெருளி.கஃபேட்டிரியா என்பது நமக்கு நாமே பரிமாறிக்கொள்ளும் தற்பரிமாற்றச் சிற்றுண்டியகம். சில இடங்களில் ஒரு பகுதித் தற்பரிமாற்றப் பகுதியாகவும் மறு பகுதி பரிமாறுபவர்கள் உள்ள உண்டியகமாகவும் இருக்கலாம். இதனாலும்…

வெருளி நோய்கள் 411-415 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 406-410 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 411-415 411. உணர்ச்சி வெருளி – Animotophobia உணர்ச்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உணர்ச்சி வெருளி.மகிழ்ச்சி சார்ந்த அல்லது துயர உணர்வுகள் எதுவாயினும் அதற்கு ஆட்பட்டுப் பேரச்சம் கொள்வர்.உணர்ச்சிவய வெருளி(Emotaophobia) உள்ளவர்களுக்கு உணர்ச்சி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 உணர்ச்சிவயம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உணர்ச்சிவய வெருளி.உணர்ச்சி வெருளி(Animotophobia) உள்ளவர்களுக்கு உணர்ச்சிவய வெருளி வரும் வாய்ப்பு உள்ளது. 00 உணவு விடுதிபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் உணவு விடுதி வெருளி.உணவகங்களில் தரப்படும் உணவு நலஆதாரமற்று(சுகாதாரமற்று) இருக்கும்,…

வெருளி நோய்கள் 381-385 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 376-380 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 381-385 புனைவுரு பாத்திரமான தித்தி மனிதன்(Candyman) குறித்த வரம்பற்ற பேரச்சம் தித்தியன் வெருளி.தித்தி மனிதன் பாத்திரம் திகிலூட்டுவதால் இப்படத்தைப் பார்த்தாலும் தித்தி மனிதன் தொடர்பான செய்திகளைப் படித்தாலும் தொடர்புடை படங்களைப் பார்த்தாலும் பேரச்சம் கொள்கின்றனர்.00 இன்மா (cake) மீதான மிகையான பேரச்சம் இன்மா வெருளி.cake என்பதற்கு அணிச்சல், இனிப்பப்பம், இனியப்பம், இன்னப்பம், மாப்பண்டம் எனப் பலவாறாகக் கூறுகின்றனர். நான் இன்மா எனச் சுருக்கமாகக் கூறுகிறேன்.இனிப்பு மீதும் இனிப்புப் பொருள்கள் மீதும் வெருளி உள்ளவர்களுக்கு இன்மா…

வெருளி நோய்கள் 376-380 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 371-375 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 376-380 இன்கண்டு(chocolate)பற்றிய அளவற்ற பேரச்சம் இன்கண்டு வெருளி.‘சாக்கலேட்டு’ அல்லது ‘சாக்கொலேட்டு’ என்பது கொக்கோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இது மத்தியக் கால அமெரிக்கச் சொல் ஆகும். கல்கண்டு என்பதன் அடியொற்றி இதன் இனிப்புச் சுவை அடிப்படையில் தமிழில் இன்கண்டு எனலாம்.00 தித்தி (candy) குறித்த வரம்பற்ற பேரச்சம் தித்தி வெருளி.‘மிட்டாய்’ என்பது தமிழ்ச்சொல்லல்ல. karamela என்னும் கிரேக்கச் சொல்லை இன்பண்டம், தித்தி எனச் சொல்லலாம். எனினும் chocolate என்பதை இன்கண்டு எனக் குறித்துள்ளதால் இதனைத்…

வெருளி நோய்கள் 371-375 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 366-370 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 371-375 இறைமம்(spiritual thing)சார்பானவை குறித்த வரம்பற்ற பேரச்சம் இறைம வெருளி.இதனை ஆன்மா என்றும் ஆன்மாவைத் தமிழில் ஆதன் என்றும்உயிர் நலம்சார்ந்த என்றும் குறிப்பிடுகின்றனர். எனினும் நடைமுறையில் சமயம் சார்ந்தும் இறை நெறி சார்ந்தும் உள்ளது. எனவே, இதனை இறைமம் எனக் குறிப்பிட்டுள்ளேன்.00 இறைமை தொடர்பான வரம்பற்ற பேரச்சம் இறைமை வெருளி.இறைமை நூலைப்படிப்பதால் மட்டுமல்லாமல், இறைமை வழிபாடு, தொடர்பான நிகழ்வுகள் முதலான அனைத்திலும் வெறுப்பும் பேரச்சமும் கொள்வர்.காதல் தோல்வியால்கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே…

வெருளி நோய்கள் 366-370 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 361-365 – தொடர்ச்சி) வெருளி நோய்கள் 366-370 இறால் மீன்(shrimp) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இறால் வெருளி.இறால் மீனைப் பார்த்தால் அல்லது சமைத்த இறாலைப் பார்த்தால் அல்லது இறால் மீனை உண்டால் பேரச்சம் வரும்.விலங்கு வெருளி(Zoophobia) உள்ளவர்களுக்கும் இப்பி வெருளி (Ostraconophobia) வருபவர்களுக்கும் இறால் வெருளி வர வாய்ப்புண்டு. 00 இறுதிச்சடங்கு குறித்த வரம்பற்ற பேரச்சம் இறுதிச்சடங்கு வெருளி.பிறரது இறுதிச்சடங்கைப்பார்க்கும் பொழுது அல்லது பிறரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் பொழுது துயரம் வருவதாலும் தனக்கோ தன் வீட்டிலுள்ள மூத்த உறுப்பினர்களுக்கோ பிறருக்கோ இறுதிச்சடங்கு…

வெருளி நோய்கள் 351 – 355 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 346-350 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 351 – 355 இலை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இலை வெருளி.சில இலைகள் கீரைகளாக உணவிற்குப் பயன்படுகின்றன. சில இலைகள் மருந்தாக மூலிகைகளாகப் பயன்படுகின்றன. சில இலைகள் அழகாகக் காட்சி யளிக்கின்றன. ஆனால், இலைகளின் தோற்றம், பயன்பற்றிய எண்ணம் எதுவுமில்லாமல் காரணமின்றி இலைகள் மீது அச்சம் கொள்வோர் உள்ளனர்.00 இலையுதிர் காலம் குறித்த வரம்பற்ற பேரச்சம் இலையுதிர் கால வெருளி.கோடைக்காலத்திற்கும் குளிர்காலத்திற்கும் இடையில் இலையுதிர்காலம் வருகிறது. இக்காலத்தில் இலைகள் பழுப்பு மஞ்சள் நிறமடைந்து உதிர்வதால் குப்பைகளாக…

வெருளி நோய்கள் 346 – 350 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 341 – 345 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 346 – 350 346 இருள் வெருளி-Achluophobia/Lygophobia/Nyctophobia/Scotophobia இரவு, இரவுப்பொழுதில் வரும் இருட்டு முதலியன குறித்த வரம்பு கடந்த பேரச்சம் இரவு வெருளி/ இருண்மை வெருளி/ இருள் வெருளி/ இரா வெருளி என அழைக்கப்பெறுகின்றது. எப்படி அழைத்தாலும் பொருள் ஒன்றுதான். எனவே நாம் இருள் வெருளி என்றே அழைப்போம்.இரவில் வெளியே செல்லுதல், இரவில் தனியாகப் படுத்தல், இரவுப்பொழுதில் யாரேனும் வருதல் அல்லது யாரையாவது பார்த்தல், இருட்டுச் சூழல் என இவர்கள் பேரச்சம் கொள்வர்.Nyctohylo…