வெருளி நோய்கள் 1291 -1295 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1286 -1290 : இலக்குவனார் திருவள்ளுவன் -தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1291 -1295 தீங்கிழைக்கும் தீயவன் அல்லது தீயவள் குறித்த அளவுகடந்த பேரச்சம் தீயர் வெருளி.தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பவர்களைக் கண்டு வெறுப்பும் பேரச்சமும் கொள்வர்.தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் கதைகளிலும் வரும் தீய பாத்திரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தும் பேரச்சத்திற்கு ஆளாவர். பொறாமையால் அல்லது பழி வாங்குவதற்காகத் தனக்குச் சூனியம் வைப்பதாக அல்லது மந்திரத் தகடு வைப்பதாக எண்ணியும் பிறர் மீது வெறுப்பும் சினமும் கொண்டு அஞ்சுவர்.00 தீச்செய்தி பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தீச்செய்தி…
வெருளி நோய்கள் 1286 -1290 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1281 -1285 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1286 -1290 தீக்கோழி(நெருப்புக் கோழி) மீதான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் தீக்கோழி வெருளி.Strouthokamel என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தீக்கோழி.“தீக்கோழி அருகே இருந்து ஒலி எழுப்பாதீர். அது உங்கள் கண்களைக் கிழித்து நெஞ்சகத்தைப் பிளந்து விடும்’ என்று சொல்லப்படுவதால் தீக்கோழி குறித்த பேரச்சம் வருகிறது.பொதுவாக நெருப்புக் கோழி என்று சொல்லப்பட்டாலும் எழுத்துச் சுருக்கத்திற்காகத் தீக்கோழி எனக் குறிக்கப் பெற்றுள்ளது.00 தீக்காயம் குறித்த வரம்பற்ற பேரச்சம் தீக்காய வெருளி.தனக்குத் தீக்காயம் ஏற்பட்டால் அது குறித்து…
வெருளி நோய்கள் 1251 -1255 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1246 -1250 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1251 -1255 மூச்சுத் திணறல் வரும் என்று தேவையின்றியும் தக்கக் காரணமின்றியும் வரும் அச்சமே திணறல் வெருளி. மூச்சுத்திணறல் வரும் பொழுது அதற்கு ஆட்பட்டவரும் அதைப் பார்ப்பவரும் அதைத் தணிப்பதற்கான வழிமுறைகளில் இறங்காமல் தீவிரமான எதிர் சிந்தனைகொண்டு அச்சம் அடைவதும் திணறல் வெருளிதான்.மூச்சடைப்பு வெருளி (choking phobia ) என்றாலும் இதுதான்.pnig என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் மூச்சுத் திணறல்.angino என்னும் இலத்தீன் சொல்லிற்குத் தாெண்டைத் தொற்று, மூச்சுத் திணறல் எனப் பொருள்கள்.00 திங்கட்கிழமைபற்றிய பெருங்கவலையும்…
வெருளி நோய்கள் 1246 -1250 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1241-1245-தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1246 -1250 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 3/5
வெருளி நோய்கள் 1241 -1245 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1237 -1240 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1241 -1245 தாள் பிடிப்பி (paper clip) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தாள் பிடிப்பி வெருளி.இதனை முதலில் செம் நிறுவனத்திற்காக (Gem Company) உருவாக்கியதால் இதனைச் செம் பிடிப்பி என்று பொதுவாகச் சொல்வர். இதனை மடக்கூசி என்றும் சொல்வர். ஊசி என்பது துளைப்பது. இது துளைப்பதல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட தாள்களை இறுகப் பிடிப்பது. எனவே, தாள்பிடிப்பி என்பது பொருத்தமாக இருக்கும்.00 தாள் பை குறித்த வரம்பற்ற பேரச்சம் தாள் பை வெருளி.தாள் பை…
வெருளி நோய்கள் 1237 -1240 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1233 -1236 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1237 -1240 தார்பக்கு/இசுடார்பக்கு காழநீர் நிறுவனம்(coffee company) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தார்பக்கு வெருளி.தார்பக்கு/இசுடார்பக்கு, வாசிங்டனில் 1971 இல் தொடங்கப்பட்ட நிறுவனம் . இன்றைக்கு உலகத்தில் 30,000 இற்கு மேற்பட்ட இடங்களில் இதன் காழநீர் மனைகள் உள்ளன.00 தாவீது இரீடு கதைப்பாத்திரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தாவீது இரீடு வெருளி.தாவீது இரீடு பழுப்பு நிறமுள்ள எறும்புத்தின்னி; உணவாக்குக் கலைஞர்.00 தாழ் கூரை குறித்த வரம்பற்ற பேரச்சம் தாழ் கூரை வெருளி.cellar என்னும் இலத்தீன்…
வெருளி நோய்கள் 1229 -1232 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1225 -1228 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1229 -1232 1229.தாய்மாமா வெருளி- Avunculusphobia/Gufuphobia தாய்மாமா குறித்த அளவுகடந்த பேரச்சம் தாய்மாமா வெருளி.தந்தை மைத்துனர் வெருளி/அம்மான் வெருளி – Gufuphobia; தாய்மாமா வெருளி – Avunculusphobia என்று இருவகையாகக் குறிக்கப் பெறுகிறது. தந்தை மைத்துனர் என்றால் தாயின் உடன் பிறந்தவர். அப்படியானால், தாய்மாமா. எனவே, இரண்டையும் தாய்மாமா வெருளி என்றே சொல்லலாம்.தங்கை அல்லது தமக்கை மக்களுக்குத் தாய்மாமன்மார் சீர் செய்வதைத் தங்கள் கடமையாகவும் பெருமையாகவும் கருதுவர்.00 தாய்வழி அத்தை தொடர்பான அளவு…
வெருளி நோய்கள் 1221-1224 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1216-1220 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1221-1224 சில சூழல்களைத் தாங்கிக் கொள்ள இயலாமை குறித்த பேரச்சம் தாங்காமை வெருளி.உயர்வளிமண்டல ஈரப்பதத்தைச் சில தாவரங்களால் தாங்கிக் கொள்ள இயலாது. அதுபோல் சில சூழல்களைப் பொறுத்துக்கொள்ள இயலாமல் காரணமற்ற பேரச்சம் கொள்வர்.இதற்குச் சரியான சொல் பொறாமை(Intolerance) என்பதுதான். ஆனால், பொறாமை என்பதை அழுக்காறு என்னும் பொருளில்தான் பார்ப்போம். (அழுக்காறும் பொறாமையின் வெளிப்பாடுதான்.) பொறுக்காமை என்பதும் சரியான சொல்லே. ஆனால் பொறுக்குதல் என்பதன் எதிர்ச்சொல்லாகக் கருதக் கூடாது. எனவே, பொருள் குழப்பம வரக்கூடாது என்பதற்காகத் தாங்க இயலாமையைக்…
வெருளி நோய்கள் 1216 -1220 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1211-1215 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1216 -1220 பிறரால் தனித்து விடப்பட்டதாகக் கருதும் அளவுகடந்த பேரச்சம் தனியை வெருளி(Ermitophobia).பிறரிடமிருந்து ஒதுக்கப்பட்டு வாழ்வதால் உதவுவார் இல்லை என அளவுகடந்த பேரச்சம் கொண்டிருப்பர்..இவ்வாறு பலவகையாகத் தனிமை தொடர்பான வெருளிகள் சொல்லப்பட்டாலும் அடிப்படையில் யாவும் ஒன்றே. திருமண வாழ்க்கையின்றித் தனித்து இருப்பதும் குடும்ப வாழ்க்கைக்குப் பின்னரும் பிறருடன் ஒன்றாமல் ஒன்றியாய் இருப்பதும் சிலர் இயல்பு. தனிமையில் இருக்கும் பொழுது துன்புறுத்தும் சிந்தனைகள் குவிந்து வாட்டும். தனித்த சூழல் கவலைகளைப் பெருக்கும். செயல்பாட்டுத் தடைகளும் ஏற்படும்….
வெருளி நோய்கள் 1206-1210 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1201-1205 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1206-1210 தள்ளுவண்டி/பிள்ளைகளை உலாத்துவதற்கு அழைத்துச்செல்லும் உலாவண்டி(stroller) குறித்த வரம்பற்ற பேரச்சம் தள்ளுவண்டி வெருளி.உலா வண்டி என்றால் சுற்றுலாவிற்குச்ச செல்வதற்குரிய மகிழுந்து எனத் தவறாகக் கருதலாம் என்பதால் அதனைக் குறிக்கவில்லை. அதுபோல் தள்ளுவண்டி என்றால் சுமைகளைத் தள்ளிச் செல்ல உதவும் வண்டி என்று கருதக்கூடாது.00 தற்காப்புக்கலை(karate)பற்றிய தேவையற்ற அளவுக்டந்த பேரச்சம் தற்காப்புக்கலை வெருளி.தற்காப்புக் கலையில் ஈடுபடுவோர் தங்களின் கவனக் குறைவாலோ போதிய தேர்ச்சியின்மையாலோ தாக்குதலுக்கு உள்ளாகலாம் எனப் பேரச்சம் கொள்கின்றனர். தற்காப்புக்கலையில் ஈடுபடுபவர்களைப் பார்ப்பவர்களும் தேவையின்றிப்…
வெருளி நோய்கள் 1196-1200 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1191-1195 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1196-1200 பார்க்காத அலைவரிசையில் பார்க்கவேண்டிய நிகழ்ச்சியைத் தவறவிடுவோமோ எனப் பேரச்சம் கொள்வது தவறுகை வெருளி.தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே மற்ற அலைவரிசையில் இன்றியமையா நிகழ்ச்சியைப் பார்க்காமல் போகிறோமோ எனக் கவலைப்படுவர். சில நேரங்களில் குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க எண்ணியிருப்பர். என்ன நிகழ்ச்சி, எந்தத் தொலைக்காட்சி அலைவரிசை என நினைவின்றி அதனைப்பார்க்க இயலவில்லையே எனக் கவலைப்படுவோரும் உள்ளனர்.நிகழ்ச்சி தவறுதல் குறித்த வெருளி என்பதால் தவறுகை வெருளி என முதலில் குறிப்பிட்டிருந்தேன்.இருப்பினும் தவறுகை…
வெருளி நோய்கள் 1191-1195 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1186-1190 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1191-1195 தவறான புரிதல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தவறான புரிதல் வெருளி.இத்தகையோர் விதிமுறைகள், வரையறைகள் முதலியவற்றில் தவறான புரிதல் ஏற்பட்டால் கெடுவிளைவு ஏற்படும் என்ற பேரச்சத்திற்கும் ஆளாகின்றனர்.00 தவறான வரிசையில் நின்றுவிட்டோமோ எனப் பேரச்சம் கொள்வது தவறான வரிசை வெருளி.வரிசையில் நின்றபின், தான் நிற்கும் வரிசை மெதுவாக நகர்வதாகவும் தவறான வரிசையில் நின்றுவிட்டோம், மாடம் அருகில் செல்வதற்கு முன்னர் பயணச்சீட்டு, திரைச்சீட்டு முதலியவை விற்று விடும், என்பனபோன்று அச்சம் கொள்வர். சில சமயங்களில் ஒன்றுக்கு…
