உ.வே.சா.வின் என் சரித்திரம் 109 – அத்தியாயம்-71, சிறப்புப் பாடல்கள்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 108 – அத்தியாயம்-70 . புது வீடு-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-71 சிறப்புப் பாடல்கள் தருமபுர ஆதீனத்து அடியவருள் ஒருவரும் சிறந்த தமிழ் வித்துவானும் காசியில் சில வருடங்கள் வசித்தவருமான சிரீ பரம சிவத் தம்பிரான் என்பவர் சுப்பிரமணிய தேசிகரிடத்தில் மிக்க பக்தியுடையவராகித் தருமபுர ஆதீனகர்த்தருடைய அனுமதி பெற்றுப் பெரும்பாலும் திருவாவடுதுறையிலேயே இருந்து வந்தனர். அவரிடத்தில் சுப்பிரமணிய தேசிகருக்கு விசேடமான அன்பு உண்டு. அவர் திருவாவடுதுறையில் இருந்த பொழுது சிறந்த நூல்களைப் படித்து ஆராய்ந்தும், மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொண்டும் வந்தார்….