சிறந்த நூல் பரிசுத் திட்டத்தில் பரிசுகளை உயர்த்திய முதல்வருக்கு நன்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்
(காண்க-சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை-இலக்குவனார்திருவள்ளுவன்) சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசளிப்புத் திட்டத்தில் நூலாசிரியருக்கும் பதிப்பாளருக்கும் பரிசுத் தொகையை உயர்த்திய அரசிற்கு நன்றி! முதல்வர்,அமைச்சர் பெருமக்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் பாராட்டு! பிற வேண்டுகோள்களையும் ஏற்க வேண்டுகோள்! “சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை” என ‘அகரமுதல’ இதழின் 26.06.2024 ஆம் நாளிட்டஇதழுரையில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். மகிழ்ச்சியான செய்தி. குறுகிய காலத்தில் முதல்வர் வேண்டுகோளில் பரிசு தொடர்பான வேண்டுகோளை ஒரு பகுதி ஏற்றுள்ளார். கடந்த 26.06.2024 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்ட மன்றக்…