பருவமழை பொய்த்துப் போனதால் பட்டுப்போன வாழை மரங்கள்
தேனிப் பகுதியில் பருவமழை பொய்த்துப் போனதால் வாழை மரங்கள் கருகத்துவங்கியுள்ளன. தேனி அருகே உள்ள குள்ளப்புரம், மருகால்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, செயமங்கலம் முதலான பகுதிகளில் நுhற்றுக்கணக்கான காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை, சாகுபடி செய்யப்படுகிறது. பச்சை வாழை, மொந்தை, செவ்வாழை, கற்பூரவல்லி எனப் பலவகையான வாழைகள் பயிரிடப்பட்டு, தமிழகத்திற்குள்ளும் அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதனால் இப்பகுதி உழவர்கள் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருந்தனர். கடந்த இரண்டு வருடகாலமாகப் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர், வாய்க்கால் தண்ணீர்…
ஒரே இடத்தில் பல்வேறு பயிர்த்தொழில் செய்து வரும் உழவர்கள்
தேனிப் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் ஒரே நிலத்தில் பல்வேறு பயிரிடுதலில் கவனம் செலுத்தி வருகின்றனர். தேனிப் பகுதியில் கடந்த சில வருடங்களாக போதிய மழை பொழியவில்லை. இதனால் உழவிற்குரிய வேளாண்பகுதி நாளுக்குநாள் சுருங்கி வருகிறது. இந்நிலையில் கிடைக்கின்ற நீரை வைத்துக் கரும்பு, தக்காளி, முட்டைக்கோசு எனப் பல்வேறு பயிரிடுகையை ஒரே இடத்தில் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்பாக உழவர்களிடம் கேட்டபோது, “மழை கடந்த இரண்டு வருடகாலமாக சரிவரப் பெய்யவில்லை. இதனால் நெல் முடிந்த பின்பு வாழை அதன் பின்னர் கரும்பு…
தேனி மாவட்டத்தில் காட்சிப்பொருளான பத்தாயங்கள்
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு நீர் வளமும் நிலவளமும் மிகுந்த பகுதி. அண்டை மாநிலமான கேராளவில் மழை பொழிந்து இருப்பதால் எப்பொழுதும் சாரல் மழை பொழிந்து கொண்டே இருக்கும். இதன் அண்மையில் வருடம் முழுவதும் மழை பொழிவதால் வருசநாடு என்ற பெயரும் உண்டு. இவை தவிர முல்லைப்பெரியாறு அணை, மஞ்சளாறு – வைகை அணை பாய்கின்ற பகுதியாகும். இதனால் இப்பகுதியில் கடந்த காலங்களில் மும்மாரி மழை பொழிந்தும் ஆற்றுப்பாசனங்களில் நெல் விளைச்சல் எப்போதும் இருக்கும். எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று நெல்…
தேனிப் பகுதியில் நிறம் மாறும் கிணறுகள் – அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தேனிப் பகுதியில் நிறம் மாறும் கிணறுகளினால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி, குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டி, எழுவனம்பட்டி, புல்லக்காபட்டி பகுதிகளில் கிணறுகளில் உள்ள தண்ணீர் நிறம் மாறிவருகிறது. இப்பகுதியில் சாயத்தொழிற்சாலை, சருக்கரைத் தொழிற்சாலை, காழிலை(காப்பி)த்தொழிற்சாலை எனப் பல தொழிற்சாலைகளும் பாறைகளை உடைத்துத் தூசு எடுக்கும் தொழிற்சாலைகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இதனால் சாயத்தொழிற்சாலையின் கழிவு நீர், சருக்கரைத்தொழிற்சாலையின் கழிவு நீர், இரவு நேரங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ச் சுமையுந்துகளிலும் இழுபொறிகளின் மூலமும் எடுத்துச்செல்லப்பட்டுக் கொட்டப்படுகின்றன. இவ்வாறு கொட்டப்படும் கழிவுநீர்கள் …
தேனிப் பகுதியில் நீரின்றிக் கருகிய கரும்புகள் – துயரீட்டுத்தொகை வழங்குக!
தேனிப் பகுதியில் நீரின்றிக் கருகிய கரும்புகளால் உழவர்கள் கவலை அடைந்துள்ளனர். தேவதானப்பட்டி பகுதி அருகே உள்ள ஊர், தே.வாடிப்பட்டி. இப்பகுதியில் நெல், கரும்பு ஆகிய பயிரிடல் முதன்மை உழவாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் மஞ்சள் ஆறு நீரை நம்பி உழவுத்தொழில் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள கிணறுகள், கண்மாய்கள், குளங்கள் அனைத்தும் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. மேலும் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து விட்டது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள உழவர்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி இப்பகுதியில் உள்ள பயிர்த்தொழிலைக் காப்பாற்றி வந்தனர். இப்பொழுது தண்ணீர்…
கமலைகள் உறுபயனிழந்து கோழிகள் அடைக்கப் பயன்படல்
தேனிப் பகுதியில் நீர்இறைக்கப் பயன்பட்ட கமலைகள் தற்பொழுது கோழிகள் அடைத்து வைக்கப் பயன்பட்டு வருகிறது. தேவதானப்பட்டி பகுதி வேளாண்மை சார்ந்த பகுதியாகும். இப்பகுதியில் தோட்டங்கள், வயல்கள், தோப்புகள் என ஏராளமாக இருந்தன. இவைதவிர தேவதானப்பட்டி பகுதியை வளம் சேர்க்க மஞ்சள் ஆறு, வைகை ஆறு, பச்சிலைநாச்சியம்மன், ஆறு எனப் பல ஆறுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள், கண்மாய்கள், நூறாயிரத்திற்கும் மேற்பட்ட கிணறுகள் என இருந்தன. இதன் மூலம் இப்பகுதியில் வேளாண்மை செழித்து வந்தது. கடந்த பத்தாண்டுகளாக மும்மாரி மழை பொழிந்த இப்பகுதி தற்பொழுது…
பால்சாமி (நாடார்) கல்வி அறக்கட்டளை: ஊக்கத்தொகை வழங்கும் விழா
பால்சாமி (நாடார்) கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா சீர்காழியில் பால்சாமி (நாடார்) கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் காமராசரின் பிறந்த நாள் விழாவைக் கல்வி விழாவாகக் கொண்டாடுவது வழக்கம். அதில் மாநில அளவில் 12 ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுத்து அருவினை படைத்தவர்களையும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களையும் அழைத்து வந்து பரிசுத்தொகை கொடுத்தும் சான்றிதழ் கொடுத்தும் மாணவ, மாணவிகளைப் பாராட்டுவது வழக்கம். மேலும் பால்சாமி (நாடார்)…
‘கல்லும் வெல்லும்’ – இலக்கிய மாத இதழ் வெளியீட்டு விழா
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நகரில் ‘கல்லும் வெல்லும்’ என்ற இலக்கிய மாத இதழ் தனியார் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. முதல் படியைக் கவிஞர் கி.சாந்தகுமார் வெளியிட்டார்; தொழில் அதிபர் மை.வீரர் அப்துல்லா பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் பேசிய கவிஞர் கி.சாந்தகுமர் மக்கள்நாயகத்தின் நான்காவது தூண்களில் ஒன்று இதழ்த்துறை. இதழ்த் துறையில் நாளிதழ், இலக்கியம், குற்றம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தமிழ் வளர்ச்சிக்குச் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நமது பரம்பரை,. பண்பாடு, கலை, இலக்கியம் போன்றவற்றில் ஒன்றான கல்வெட்டு தொடர்பான நூல்கள்…
நீர்நிரம்பி வரும் மஞ்சளாறு அணை! நீரைச் சேமிக்குமா மாவட்ட நிருவாகம்?
மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் கனமழையால் நிரம்பி வரும் மஞ்சளாறு அணை தேவதானப்பட்டி அருகே உள்ள மேற்குமலைத்தொடர்ச்சியில் கடந்த ஒரு வாரகாலமாக மழை பொழிந்து வருவதால் மஞ்சளாறு அணை நிரம்பி வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் கடந்த ஒரு வாரகாலமாக மழை பொழிந்து வருவதால் மஞ்சளாறு அணை நிரம்பி வருகிறது. கொடைக்கானல் பகுதியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் மழை பொழிவதால் மஞ்சளாறு அணை, மருதாநதி அணை, பேரிசம் ஏரி, சண்முகா அணை முதலான பல்வேறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கொடைக்கானல்…
அ.வாடிப்பட்டியில் பரிசுகள் வழங்கும் விழா
விடுதலை நாளை முன்னிட்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழா தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் விடுதலை நாளை முன்னிட்டுப் பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, நடனப்போட்டி முதலான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சமாலா பிச்சைமணி தலைமை தாங்கினார். ஒன்றியப்பெருந்தலைவர் செல்லமுத்து சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளும் சுழற்கேடயங்களும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர், முன்னாள் கெங்குவார்பட்டிப் பெருந்தலைவர் காட்டுராசா, தேவதானப்பட்டிமன்ற…