[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 47(2.17) – தொடர்ச்சி]   மெய்யறம் இல்வாழ்வியல் 48. அச்ச மொழித்தல் அச்ச மனமுட லழிவுற நடுங்கல். அச்சம் என்பது உடலும் மனமும் பதறுதல் ஆகும். அஃதறி யாமையி னந்தமென் றுணர்க. அச்சம் அறியாமையின் உச்சம் ஆகும். அறம்புகழ் செய்தலா லழியினும் வாழ்வாம். அறமும் புகழும் ஏற்படுத்தக்கூடிய நல்ல செயல்களைச் செய்வதால் துன்பம் ஏற்பட்டாலும் அது பின்னர் நல்வாழ்வைத் தரும். மறம்பழி செய்தலால் வாழினு மழிவாம். பழி ஏற்படுத்தக்கூடிய தீய செயல்களைச் செய்வதால் நன்மை ஏற்பட்டாலும் அது பின்னர் அழிவைத் தரும்….