சாதியப் படுகொலைகளுக்கு எதிரான கூட்டமும் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப் பட வெளியீடும்

அம்பேத்கருடைய 125ஆவது பிறந்தநாளில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டமும் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப் பட வெளியீடும்   புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய 125ஆவது பிறந்தநாளில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் சித்திரை 01, 2047 – ஏப்பிரல் 14, 2016 அன்று சென்னை திருவொற்றியூர் பகுதியில் நடத்தப்பட்டது. எளிய மக்கள் அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தை நடைமுறைப்படுத்திய அம்பேத்கரின் நினைவை வலியுறுத்தும் வகையில் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படம் இப்பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது….

பௌத்தத்தை முறியடிக்கவே பிராமணர்கள் மரக்கறி உண்டனர்

பௌத்தத்தை முறியடிக்கவே பிராமணர்கள் மரக்கறி உண்டனர்     அக்காலத்தில் பிராமணர்கள் வீட்டிற்கு யாரேனும் விருந்தினர்கள் வந்தால், அவர்களைப் பெருமைப்படுத்த ஆ(பசு)வைக் கொன்று அவருக்கு விருந்தளிக்க வேண்டியிருந்தது. இதனால் அந்த விருந்தாளி ‘கோக்னா’ என்று அழைக்கப்பட்டு, வெறுக்கப்பட்டார். இது போன்றே ஆ வதையைச் செய்பவர்கள் என்று பிராமணர்கள் அனைவரும் வெறுக்கப்பட்டு வந்தனர்.   இத்தகைய இக்கட்டான நிலைமையில், ஒரு வழிபடும் முறையாக வேள்வியை நிறுத்துவதையும், மாட்டு வதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் தவிர பௌத்தர்களுக்கு எதிராகத் தங்கள் நிலைமையை மேம்படுத்திக் கொள்ளப்  பிராமணர்களுக்கு வேறு வழியில்லை….

பனுவலின் அம்பேத்கர்பற்றிய தொடர் நிகழ்வுகள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் மாலை 5: 30 மணிக்கு நடைபெறும் இடம்: பனுவல் புத்தக விற்பனை நிலையம் 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 600 041. தொடர்புக்கு : 89399 – 67179 / 044-4310-0442 பங்குனி 15 / மார்ச்சு 29        ஞாயிறு     : ‘தலித் முரசு’ இதழ்களின் கண்காட்சி தோழர். நீலகண்டன் (கருப்புப் பிரதிகள்) தொடங்கிவைப்பு பங்குனி 20 / ஏப்பிரல் 3 வெள்ளி:  அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகள் – வாசிப்பு அருள்மொழி, பாத்திமா பர்ணாடு, வ. கீதா,…