(தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 3/4 தொடர்ச்சி) மறைந்துபோன தமிழ் நூல்கள் 4/4 அயலார் படையெடுப்பு  அரசர்களின் போரினாலும் புத்தகசாலைகள் அழிக்கப்பட்டு அருமையான நூல்கள் மறைந்துபோய்விட்டன. சேர சோழ பாண்டிய அரசர்கள் தமது அரண்மனைகளில் நூல் நிலையங்களை அமைத்திருந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. அப்போர்களில், ஒருவர் நகரத்தை மற்றவர் கைப்பற்றியதும் உண்டு. ஆனால், அவர்களினால் நூல்நிலையங்கள் அழிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர்கள் தமிழர்கள்; தமிழரசர்கள் தமிழ் நூல் நிலையங்களை அழிப்பது மரபல்ல: மாறாகப் போற்றினார்கள்.   தமிழரல்லாத வேற்றரசர்கள், தமிழ் நாட்டில் வந்து போர்…