நாலடி இன்பம் 5 : அறம் அவசரம் நின்றன நின்றன நில்லா எனவுணர்ந் தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க; சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று. பொருள்: உடம்போடு கூடிவாழுமாறு ஏற்பட்ட வாழும் நாட்கள் செல்கின்றன செல்கின்றன; கூற்றுவன் சினந்து விரைந்து வருகின்றான் வருகின்றான்; ஆதலால், நின்றன நின்றன – நிலைபெற்றன நிலைபெற்றனவென்று நினைத்துக்கொள்ளப்பட்ட செல்வப் பொருள்கள், நிலைபெறா என்று உணர்ந்து இசைவான அறச்செயல்களைச் செய்யக் கருதினால் உடன்விரைந்து செய்க. சொல் விளக்கம்: வாழ்நாள் காலத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்து போய்க்…