வானியல் – astronomy : ஞாயிறு பிற கோள்கள் விண்மீன்கள் முதலிய வானில் உள்ளவற்றை ஆராயும் துறை வான இயற்பியல் –   astrophysics : விண்வெளியில் உள்ளவற்றின் இயல்பையும் அவற்றால் காற்றுவெளியில் நேரும் நிகழ்வுகளையும் ஆராயும் துறை உயிரிய வேதியியல் –   biochemistry: உயிரின் வேதிச்செயல்பாடுகளையும் வேதிப்பொருள்களையும் ஆராயும் துறை. உயிரிய வேதி வகைப்பாட்டியல் –   biochemical taxonomy: வேதிப்பண்புகளின் அடிப்படையில் உயிரிகளைப் பாகுபாடு செய்யும் ஆய்வுத் துறை. உயிரிய மின்னணுவியல் – bio electronics : உடலில் மின்னணுக் கருவி அமைப்புகளைப் பதிய…