(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 2 தொடர்ச்சி)   3 தமிழின் தனிப்பெருந் தன்மைகள் தாய்மை     பெற்றோரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் குமரிநாட்டுத் தமிழ்ச்சொற்கள், ஆரியம் உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றில் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.     நூன், நூம் என்னும் பண்டைத் தமிழ் முன்னிலைப் பெயர்கள், வடநாட்டு இந்தியில் து, தும் என்றும், இலத்தீனில் து, வேஃச்(ஸ்)  என்றும், கிரேக்கத்தில் தூ (சூ), ஃக(ஹ்)மேயிஃச்(ஸ்) என்றும் பழைய ஆங்கிலத்தில்  தூ, யி(யூ) என்றும், சமற்கிருதத்தில் த்வம், யூயம் என்றும் முறையே…