கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -10 – அன்றே சொன்னார்கள் 48 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 9 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -10 கட்டடங்கள், அகலமாகவும் உயரமாகவும் நன்முறையிலும் வளத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நாகரிகச் சிறப்பிற்கு எடுத்துக் காட்டாகவும் பாதுகாப்பு ஏந்து(வசதி)களுடனும் அமைக்கப் பட்டன என முன்னரே கண்டோம். வீடுகள் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தன இவை பற்றிய புலவர்கள் சிலர் கருத்துகளைப் பார்ப்போம். புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ, கடிமனை (கலித்தொகை : 24.9) என்றும் புலவர் மதுரை மருதனிளநாகனார், கடிமனை மாடத்து (அகநானூறு: 255.18) என்றும் பாதுகாப்பு அமைந்த மாளிகைகளைக் குறிப்பிடுகின்றனர்….
