“அரசு கிளம்பு! இப்பொழுது புறப்பட்டால்தான் இருட்டுமுன் தெட்டுராய்டு போய்ச் சேர முடியும்” என்றவாறு குமரன் வந்தான். திருநாவுக்கரசு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவே, “மூன்று நாள், கொண்டாட்டமாக இருந்துவிட்டு நாளைக்கு வேலைக்குப் போக வேண்டுமே எனக் கவலையாக இருக்கிறதா?” என்று மீண்டும் கேட்டான் குமரன். “ம்ம்… மகிழ்நனும் புகழும் ஆயத்தமாகி விட்டார்களா?” என்றவாறே அரசு படுக்கையை விட்டு எழுந்தான். “நாங்களெல்லாரும் கிளம்பியாகிவிட்டது! நீ என்ன தூங்கி விட்டாயா?” கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தான் மகிழ்நன். “இதோ! ஒரு நொடியில கிளம்பி விடுகிறேன். நீங்கள் புறப்படுங்கள்! நானும் குமரனும்…