பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 28 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(அகரமுதல 82, வைகாசி 24, 2046 / சூன் 07, 2015 தொடர்ச்சி) காட்சி – 28 அங்கம்    :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :     (ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நினைவாய்க் கவிஞரின் உள்ளத்தைக் கக்கவே வைக்க இவ்வொரு காட்சியோ! இன்னும் தூண்ட அவிழ்த்தே விரித்தார்! பட்டப்பகலாய்) கவி  :     பார்த்தாயா தம்பி! பணம் பேசும் பேச்சை! சொல்லால் சொல்ல வழியும் உண்டா? அன் :     பரம்பரையாகக் கொள்ளயடித்தே வருவோரை நாம் தான் செய்வது என்ன? கவி  :    …

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 22 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(சித்திரை 13, 2046 / ஏப்பிரல்26, 2015 தொடர்ச்சி) காட்சி – 22 அங்கம்    :     கவிஞர், அன்பரசன் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :     (இன்றைய நாட்டு நிலையை நன்றே கவிஞர் செப்புகின்றார்) அன் :     கவிஞரே! கருத்துப் பெட்டகமே! புவியின் உண்மை நிலைதான் என்ன? கவி  :     இன்றைய நாட்டின் நிலைமைதனை நன்றே உரைக்கிறேன்! கேட்டு விடு! சிந்தனை எல்லாம் சோற்றிற்கே – நாளை செலவிட வேண்டும் இந்நாட்டில் – சோறு வெந்ததும் சோற்றுப் பந்திக்கே – நாம் முந்திட…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 14– ஆ.வெ.முல்லை நிலவழகன்

 [மாசி 17, 2046 / மார்ச்சு 01, 2015 தொடர்ச்சி] காட்சி – 14 அங்கம்    :     கவிஞர், அன்பரசன் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :     (நாடகமாடுவோர் அழகுகளை நயம்பட எடுத்துக் கூறியபின் ஓடிய முடியூர் எண்ணத்தை உரைக்கின்றார் கவிஞர் அன்புக்கு) அன்ப :     இத்தனை அழகு இருவருக்கும் இருக்க வேண்டுமா? நடிப்பதற்கு! சத்தியமிட்டே சொல்கிறேன்! இருவருமே நல்ல அழகுதான்! கவி       :     பார்த்ததும் மனதிலோர் ஒழுக்கத்தைப் பரப்பிடும் அழகு ஒன்றென்றால் பார்த்ததும் காம இச்சைதனை எழுப்பிடும் அழகினை இரண்டெனலாம்! எவ்வகை…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 13– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(மாசி 10, 2046 / பிப்பிரவரி 22, 2045 தொடர்ச்சி) காட்சி – 13 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     மரக்கிளை நிலைமை  :     (நாடகக் கூட்டத்தின் சலசலப்பைப் பேடுக்குவிளக்குது ஆண்சிட்டு!) ஆண் :     அழகிய பேடே! பார்த்தாயா? அன்பு மனைவியின் பணிவிடையை! பெண் :     விழிகளைத் திறந்தே பார்த்திட்டேன்! பார்க்க அழகே! எனச்சொல்வேன்! (என்றே மேடையை நோக்கிய பின்) அதோ! அதென்ன ஒரு கும்பல்! நின்றே கூட்டத்தின் நடுவினிலே உரக்கக் கத்திப் பேசுவதேன்? ஆண் :     பேடை…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 7 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி)   காட்சி – 7அங்கம் :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடில் முன்வாசல் நிலைமை  :     (நாடகக் காட்சி முடிந்ததோ! இல்லையோ ஓடுது! மனமோ அன்புக்கெங்கோ!) அன்ப :     நாடகக் கருத்தை அறியும் முன்பு ஓடுது என்மனம் ஒன்று கேட்க? சென்னைக்கு வந்த நோக்கமென்ன? என்பதே அந்தக் கேள்வி என்பேன்! கவி       :     வானத்திலே நாகரீகம் வட்டமிட்டுச் சுற்றுதென தேன்வழியப் பேசுகின்ற சிலர் எனக்குச் சொல்லிடவே நானுந்தான் வந்தேன் நாகரீகம் கண்டேன்!…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 3 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

  (மார்கழி 28, 2045 / திசம்பர் 14, 2014 தொடர்ச்சி)     காட்சி –3 அங்கம்    :     கவிஞர், அன்பரசன், இடம்      :     கவிஞரது குடில் நிலைமை  : (கூரிய விழியாம்! உழைக்கும் தோளாம்!                    வீரிய நெஞ்சாம்! அன்பரசன் தனக்குத்தானே குடில் முன்னே! மனக்குறையோடு உரைக்கின்றான்!) அன்ப :   காலம் உணர்ந்த கவிஞருக்கு ஞாலப்பரிசு ஒரு குடிலோ; வணக்கம் புலவரே! வணக்கம்! மனநிறைவான வணக்கம்! கவி     :  யாரது? ஓகோ! வா! வா! தம்பி அன்ப   : …

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! – காட்சி 2

[கார்த்திகை 21, 2045 / திசம்பர் 7, 2014 இதழின் தொடர்ச்சி]   காட்சி – 2 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     குருவிக் கூடு நிலைமை  :     (சிட்டுக்கள் இரண்டும் மெட்டுரையாடல்) ஆண்   :  என்ன பேடே! சிரிப்பென்ன? எனக்கும் சொல்லேன்! சிரிக்கின்றேன்! பெண் :   என்னவோ! வாழ்வை நினைத்திட்டேன்! இனிமையில் என்னையே மறந்திட்டேன்! வண்ண எண்ணங்கள் விரிந்ததனால் என்னையே மறந்து சிரித்திட்டேன்!   ஆண் :   அதுவா! உண்மை! உண்மைதான்! இதயம் குளிர்ந்த சிரிப்புத்தான்! இனிய…