(அகநானூற்றில் ஊர்கள் 2/7 இன் தொடர்ச்சி அகநானூற்றில்  ஊர்கள் -3/7  ஆலங்கானம் (தலையாலங்கானம்)    ஆலங்கானம் என்பது தலையாலங்காடு என்று வழங்கப்படுகிறது. தொண்டை நாட்டிலுள்ள இவ்வூர் தேவாரப்பாடல் பெற்ற தலமாகத் திகழ்கின்றது. பாண்டிய நெடுஞ்செழியனின் பகைவரான நெடுநில மன்னனான சேரர், சோழர் இருவரும் குறுநில மன்னரான நிதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஐவரையும் போரில் வென்றதால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான்.                 “……கொடித் தேர்ச் செழியன்                 ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப                 சேரல், செம்பியன்,…