புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் – முனைவர் மறைமலை இலக்குவனார்

புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் இந்திய விண்வெளியியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கத்தூரிரங்கன் தலைமையிலான குழு ‘புதிய கல்விக்கொள்கை 2019’ என்னும் தலைப்பிலான கல்விக் கொள்கை வரைவு ஒன்றினை அண்மையில் பொறுப்பேற்றுள்ள மனிதவள மேம்பாட்டு மந்திரி இரமேசு பொக்ரியாவிடம் வழங்கியுள்ளது.  ‘வரைவு’ என்றால் நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை என்று பொருள்.  இந்தக்குழு இதற்கு முந்தைய அமைச்சர் சவடேகரால் 24-6-2017-இல் அமைக்கப்பட்டு 15-12-2018-இல் தனது அறிக்கையை நிறைவு செய்தது. மொத்தம் 484 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை மாறி வரும் உலகச் சூழலுக்கு ஏற்ப…

இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்! அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

சென்னை இந்திப் பிரசார சபை முன்பாக இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்! அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்! இடம்: இந்திப் பிரச்சார சபை, தியாகராயர் நகர், சென்னை. காலம்: தி.பி. 2048 – சித்திரை 25 (08.05.2017) திங்கள் காலை 10 மணி தலைமை : தோழர் கி. வேங்கடராமன் பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.    இந்தி மொழியைத் தமிழ்நாட்டின் கல்வி மொழியாக, பேச்சு மொழியாகத் திணித்திடப் பா.ச.க.அரசு கடற்புயல்(சுனாமி) வேகத்தில் செயல்படுகிறது. அதே வேகத்தில் தமிழைப் புறந் தள்ளித் தீர்த்துக் கட்டவும் முயல்கிறது. அண்மையில் பா.ச.க. அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக நடுவண் பள்ளிக் கல்விவாரியப் (C.B.S.E.) பள்ளிகளிலும், கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை இந்தி        கட்டாய மொழிப்பாடமாக்கப்படும் என்று…

விண் தொலைக்காட்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன்

ஆவணி 25, 2046 / செப்.11, 2015 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு விண் தொலைக்காட்சி – WIN TV ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்று இந்திக்கு எதிரான குத்துகளைப் பதிய இருக்கிறேன்   http://wintvindia.com/   இணையத் தளத்திலும் காணலாம். மறு ஒளிபரப்பு செப்.11 இரவு – அஃதாவது செப்.12 வைகறை 1.00 மணி.   வாய்ப்புள்ளவர்கள் காண்க.   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!