இந்தியாவில்தான் இருக்கிறோமா…! – அன்வர் பாலசிங்கம்   காவிரி நீர்ச் சிக்கல் தீவிரமெடுத்ததிலிருந்து தமிழகப் பதிவெண் கொண்ட ஊர்திகள் கருநாடக மண்ணில் எங்கு பார்த்தாலும் தாக்கப்படுவதும்…எரிக்கப்படுவதும்…வண்டிஓட்டுநர்கள் அம்மணமாக்கப்படுவதும்…நாம் இந்தியாவில்தான் வாழ்கிறோமா என்ற பேரச்சத்தை எனக்குள் எழுப்பியுள்ளது.   2011-இல் முல்லைப்பெரியாற்றுச்சிக்கல் தீவிரமெடுத்ததிலிருந்து  தொடர்புடைய இடுக்கிமாவட்டத்தில் மட்டுமல்ல, கேரளத்தின் எந்த மாவட்டத்திற்கும் நீங்கள் தமிழக பதிவெண்கொண்ட ஊர்தியில் போனாலும்,   அலட்சியப் பார்வையை மலையாளிகள் உங்கள் மீது வீசுவதை தவிர்க்க முடியாது. கேரளத்தில் உள் பகுதிகளான கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு, பகுதிகளில் தமிழகப் பதிவெண் கொண்ட ஊர்திகளில் …