எங்கு மறைந்தீர்? ஏன் பிரிந்தீர்?   பைந்தமிழின் பலதுறையும் ஆய்ந்தறிந்த அறிஞரே! கண்ணீரைப் பெருக்கிக் கலங்கிக் கரைந்து சிந்தை எல்லாம் நைந்திடவே எம்மைநீர் பிரிந்ததுவும்  முறையா? சொல்லாண்டு பொருளாண்டு எழிலார்ந்த காப்பியத்தின் சுவையாண்டு  திறனாய்ந்து நூல்பலவும் தந்தீரே! பல்லாண்டு பல்லாண்டு பாடவொரு வழியின்றி நில்லாமை நெறியெமக்குச் சொல்லாமல் சொன்னீரே! நவையெதுவும் இரா மோகன் புகழ்கொண்ட பேராசான்   முகம்கண்டு மகிழ்ந்திடவே வழியினிமேல் இல்லையா? கூற்றுவன் தொல்லையா? நவையற்ற நறுந்தமிழால் நலம்விளைக்கப் பல்காலும் திறனாய்வுத் துறைமேவித் தரமான நூலியற்றி அறிவார்ந்த பொருள்பலவும் செறிவாகப் புலப்படுத்தும் அரியகலை…