புலவர்கள் 3. – சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  31 –  தொடர்ச்சி)   இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  32 16. புலவர்கள் (தொடர்ச்சி) அக்காலத் தமிழ்மக்கள் இயலிசை நாடகங்களிலும், நடனங்களிலும் இன்பங் கண்டனர்.  அக்கால நடனம் எவ்வாறு நடந்தது என்பதை இயற்கைக் காட்சியில் இன்புறக் காட்டுகின்றார். இங்கு நடனப் பெண்ணாக மயில் தோன்றுகிறது.  பார்த்து மகிழும் அவையினராக மந்திகள் அமருகின்றன. குழலிசையை இயற்கையில் துளைபட்ட மூங்கிலில் கோடைக்காற்று சென்று எழுப்புகின்றது.  முழவாக அயலில் ஓடும் அருவியின் இன்னிசை  இயம்புகின்றது.  தூம்பு…

புலவர்கள் 2. – சி.இலக்குவனார்

 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  30 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  31 16. புலவர்கள் (தொடர்ச்சி) தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் ஆய மூவரும் தனிச்சிறப்புடையவர்கள்.  தொல்காப்பியர் காலத்துக்குப் பின்பே தமிழ் வளர்ப்பதற்கெனச் சங்கம் தோன்றியிருக்க வேண்டும்.  ஆதலின், சங்கக் காலத்துக்கு முற்பட்டவராவார் தொல்காப்பியர்.  தொல்காப்பியர் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு எனவும், திருவள்ளுவர் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு எனவும், இளங்கோ அடிகளின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனவும் கொண்டுள்ளோம்.  சங்கக்காலத்தைக் கி.மு….

புலவர்கள் 1. – சி.இலக்குவனார்

 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  29 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  30 16. புலவர்கள்  புலவர்களே நமது மொழியின், பண்பாட்டின், நாகரிகத்தின் புரவலர்கள் ஆவார்கள்.  புலவர் எனும் தமிழ்ச் சொல் மிகவும் பொருள் பொதிந்த ஒன்றாகும்.  வெறும் மொழிப் புலமை மட்டும் உடையோர் புலவர் ஆகார்.  மொழிப் புலமையுடன் பண்புநலன் சான்று, ஏதேனும் ஒரு துறையில் வல்லுநராகவும், பிறர்க்கென வாழும் பெற்றியராகவும் இருப்போரே புலவர் எனும் பெயர்க்கு உரியவராவார்.  சங்ககாலப் புலவர்கள் அனைவரும் இவ்…

போர்கள் – சி.இலக்குவனார்

   (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  27 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  28 15. போர்கள்  ‘போர்’ என்பது இன்று எல்லோராலும் வெறுக்கப்படும் ஒன்றாக முழங்கப்பட்டு வருகின்றது.  ஆயினும், ஆங்காங்கே போர் ஆயத்தங்களும் போர் முழக்கங்களும் நிகழ்ந்துகொண்டு தானிருக்கின்றன. ” அமைதியை நிலை நாட்டவே போர் ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளோம்” என்று பறையறையும் அரசுகளும் உள.  கட்சிக் கொள்கை, சமய வேறுபாடு, பொருட்பற்று, பதவி விருப்பம் ஆயவைபற்றி ஆங்காங்கும் போர் இயல் காட்டும் நிகழ்ச்சிகள் தோன்றி…

தமிழர் வாணிகம் 2 – சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  26 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  27 14. வாணிகம் ( தொடர்ச்சி)   காவிரிப்பூம்பட்டினம், காயல்பட்டினம், தொண்டி, முசிரி முதலியன உலகப் புகழ் பெற்ற துறைமுகங்களில் தலைமையானவை. “உலகுகிளர்ந் தென்ன உருகெழு வங்கம் புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ இரவும் எல்லையும் அசைவின் றாகி”1 விரைந்து சென்று கொண்டிருந்தன. ”அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்”2 திசைகள்தோறும் திரிந்தன. ”நெடுங்கொடி நுடங்கும் நாவாய்கள்” 3 துறைமுகங்கள் தோறும் தோன்றின. …

தமிழர் வாணிகம் 1 – சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  25 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  26 14. வாணிகம்  மக்கள் நல்வாழ்வில் சிறப்புப்புற்று ஓங்குவதற்கு அவர்கட்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் எக்காலத்தும் குறைவின்றிக் கிடைத்தல் வேண்டும்.  ‘நாடென்ப நாடா வளத்தன’ என்று திருவள்ளுவர், குறிக்கோள் நாட்டைப்பற்றிக் கூறியிருப்பினும், ஒரு நாடு தன் மக்களுக்கு வேண்டிய யாவற்றையும் பெற்றிருத்தல் என்பது அரிதே.  நாட்டில் உள்ள நகரங்களும் ஊர்களும் அவ்வாறே மக்கள் வாழ்வுக்கு வேண்டிய யாவற்றையும் பெற்றிருத்தல் இயலாது.  ஆதலின், ஒரு…

தமிழர் பழக்க வழக்கங்கள் 2. – சி.இலக்குவனார்

 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  24 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  25 13. பழக்க வழக்கங்கள் (தொடர்ச்சி) பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தன் கணவனை இழந்து தீப்பாயச் சென்றவள் தன்னை அவ்வாறு செய்ய வேண்டாவென்று தடுத்தாரை நோக்கிக் கூறியதாக உள்ள புறநானூற்றுப் பாட்டில், “அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட  காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது  அடையிடைக் கிடந்த கைபிழி பண்டம்  வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய்து அட்ட  வேளை வெந்தை வல்சி யாகப்  பரற்பெய்…

தமிழர் நாகரிகம் (தொடர்ச்சி)–சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  21 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  22 11. நாகரிகம் (தொடர்ச்சி) அணிகலன்கள் அணிந்து கொள்வதில் ஆடவரும் பெண்டிரும் பெருமகிழ்வு காட்டினர்.  தலைமுதல் கால் வரையில் அணியக்கூடிய அணிகலன்களைப் பெற்றிருந்தனர் (புறநானூறு-378). அணிகலன்கள் பொன்னாலும் முத்தாலும் மணியாலும் செய்யப்பட்டிருந்தன (குறிஞ்சிப் பாட்டு ). மணமகளுக்குத் தாலியணிதலும் அதனை ‘ஈகை யரிய இழையணி’(புறநானூறு-127) எனலும் உண்டு.  மணமகன், மணமகளுக்குக் கையுறையாக அணிகலன்கள் அளித்தலும் அவற்றுள் காதலை அறிவிக்கும் அடையாளம் பொருந்திய மோதிரம்…