(தந்தை பெரியார் சிந்தனைகள் 37 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 38 8. இலக்கியம் ‘இலக்கியம்’ என்ற பெயருக்குத் தகுதியான நூல்களை அறிஞர்கள்தாம் இயற்ற முடியும். பண்டைக்காலம் முதல் இலக்கிய ஆசிரியர்கள் பலவகையான சிறப்புகளையும் அறிவாற்றலையும் உடையவர்களாகத் திகழ்ந்தனர். எவரும் நூலியற்றல் என்பது இயலாத செயல். அறிவால் நிரம்பியவர் மிகச் சிறு தொகையினரேயாவர்.  ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம்புலவர்வார்த்தைபதி னாயிரத் தொருவர் (குறிப்பு 1 )  என்ற வெண்பாப் பகுதியால் அறியலாம். எந்த நூலைப் படித்த பிறகு மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும் என்ற வேட்கை எழுகின்றதோ…