திபேத்தியர் குடியேற்ற இடங்கள் முதல்வரே! தஞ்சம் என வந்தோர்க்குத் தாயன்பு தேவையல்லவா?   தமிழ் அறநெறிகளுள் ஒன்று, அடைக்கலம் என வந்தோர்க்கு ஆதரவு காட்டி, அரவணைத்து வாழ்வித்தலாகும். அடைக்கலப் பொருளைப் பொன்போல் காப்பவருக்கும் அடைக்கலமாக வந்தவரைத் தம் உயிரினும் மேலாகக் காப்பவர்க்கும் நற்பேறு கிட்டும் என்பது தமிழர் நம்பிக்கை. ‘விருந்தினர் இருக்கையில் சாவா மருந்தெனினும் தனியே உண்ணக்கூடாது’ என்பது தமிழ் நெறியல்லவா? அதைத்தானே தெய்வப்புலவர் திருவள்ளுவர் விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று ( திருக்குறள், எண்:82) என்கிறார்.   நம்…