ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுது செய்த தவறுகளுக்காகப் பதவிப் பொறுப்பில் இல்லாத பொழுது தண்டிக்கப் பெறும் பொழுது பதவிக்கு இழுக்குவராது. இப்பொழுது புரட்சித்தலைவி செல்வி செயலலிதா முந்தைய முதல்வர் நிலையில்(ஆனி 17, 2012 / சூலை 1, 1991 முதல் பங்குனி 22, 2017 / ஏப்பிரல் 4, 1996 வரை) இருந்த பொழுது வருவாய்க்கு மீறி உரூபாய் 66 கோடி சொத்து வைத்து இருந்தமையால் (புரட்டாசி 11, 2045 / செப். 27, 2014 அன்று)4 ஆண்டுக்காலம் சிறைத்தண்டனையும் உரூபாய் 100…