(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 7   அத்தியாயம்  3. கவிதை தொடர்ச்சி   2 இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை பற்றிப் பேசுகையில் மொழிபெயர்ப்பு முயற்சிகளைத் தனியாகக் குறிப்பிடுவது பொருத்தமாகும். பல்வேறு மொழிகளில் இருந்து ஏராளமான கவிதைகள் இக்காலப் பகுதியில் இலங்கைக் கவிஞர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. கலைநோக்கில் இருந்து சமூகநோக்குவரை ஈழத்துத் தமிழ்க்கவிதை பரிணமித்ததை மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் நாம் காணலாம். 1940 ஆம் 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பிட்ட சமூக நோக்குபற்றிய பிரக்ஞையின்றி இலக்கியச் சுவையின் அடிப்படையில் பிறமொழிக் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன….