ஈடில்லா மகள் ஈழமலர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே!    தி.பி. 2018, கார்த்திகை 09 / கி.பி.1987 நவம்பர் 25 அன்று, நான் சைதாப்பேட்டைஅலுவலகத்தில் இருந்த பொழுது தம்பி அம்பலவாணன், ஈழமலர் பிறந்த தொலைவரிச் செய்தியை எடுத்து வந்திருந்தான். ஆம், பிறக்கும் முன்னரே ஈழமலர் எனப் பெயர் சூட்டியிருந்தோம். உயிர்க்கொடைப்போராளி திலீபனைப்பற்றியே பேசிக் கொண்டிருந்ததால், “ஆண் குழந்தை என்றால் திலீபன் எனப் பெயர் சூட்டுவீர்கள், பெண் குழந்தை என்றால் திலீபி என்று பெயர் வைப்பீர்களா” எனத் தம்பி கேட்டான். திலீபன் மட்டுமா? குட்டிமணி, செகன்…