(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.28. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 29.ஊக்க முடைமை ஊக்க முயர்வுற வுனுமன வெழுச்சி. உயர்ந்ததை அடைய வேண்டும் என்ற (எண்ணமே) மன உறுதியே ஊக்க முடைமை ஆகும். ஊக்க முடைமை யுலகெலாங் கொணரும். ஊக்கமுடைமை உலகம் முழுவதையும் ஒருவனிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும் இயல்பு உடையது. ஊக்க மிலாமை யுடையவும் போக்கும். ஊக்கமிலாமை ஒருவனிடத்தில் உள்ளதையும் அவனைவிட்டு போகச்செய்யும் இயல்பு உடையது. ஊக்க முடையா ருயர்ந்தோ ராவர். ஊக்கம் உடையவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர். ஊக்க மிலாதா ருயிர்க்கும் பிணங்கள். ஊக்கமற்றவர்கள் சுவாசிக்கின்ற…