23 எக்கர் – Sand hill; sandy   மணற்குன்று எக்கர் என்பது பெருமணற்பரப்பை, மணற்குன்றைக் குறிக்கும் 54 பாடல்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அவற்றில் சில : எக்கர் இட்ட மணலினும் பலவே (புறநானூறு: 43.23) நில வெக்கர்ப் பல பெயரத் (பொருநராற்றுப்படை: 213) தூஉஎக்கர்த் துயில் மடிந்து (பட்டினப்பாலை 117) படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர் (அகநானூறு 11.9) முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்(நற்றிணை 15.11) sandy-மணல்மிகு எனப் பொறிநுட்பவியலிலும் மணல் கொண்ட எனக் கால்நடை அறிவியலிலும் பயன்படுத்துகின்றனர். அதைவிட எக்கர்…