வெருளி நோய்கள் 484-488: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 479-483 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 484-488 உமிழ்நீர் அல்லது எச்சில் துப்புவது குறித்த காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் எச்சில் வெருளி.தங்கள் மீது பிறர் எச்சில் படுவதால் மட்டுமல்ல, தங்கள் எச்சில் வடிந்து தங்கள்மேல் பட்டாலும் அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.வாயிலிருக்கும் உமிழ்நீர் தானாக வெளியேறும் பொழுது எச்சில் வடிதலாகவும் நாமாக வெளியேற்றும் பொழுது எச்சில் துப்புவதாகவும் அமைந்து விடுகிறது.பயணங்களில் அடுத்தவர் மீது விழும் வகையில் எச்சில் வடியத் தூங்குபவர் உள்ளனர். எனவே, அடுத்து இருப்பவர் பேரச்சத்திற்கு ஆளாகிறார். எனினும் இது துயில்எச்சில் வெருளி(aquadormophobia)…
