[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌ை) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌‌ொ)  தெ.பொ.மீ. மதுரைப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானதும் ‘தமிழக வரலாறும் பண்பாடும்’ என்னும் பாடத்தை நீக்கி விட்டு ‘இக்கால இலக்கியம்’ என்பதைக் கொணர்ந்தார். இக்கால இலக்கியம் என்னும் போர்வையில் கொச்சைத் தமிழ்நடைகள் உடைய படைப்புகள் கோலோச்சுகின்றன. இதனால் தமிழுக்கு மேலும் கேடுகள்தாம் விளைகின்றன. எழுத்து மொழியை வலியுறுத்திய பேராசிரியர் இலக்குவனாரின் கருத்துகளில் ஒன்றைக் காண்போம். “இன்று நம்மில் சிலர், ‘ மொழியின் உயிர் வழக்கு மொழியில்தான் உள்ளது. வழக்கு மொழியேதான் எழுத்து மொழியாகவும் கொள்ளப்படல் வேண்டும்…