திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  32 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:398) ஒருமை உணர்வுடன் கற்கும் கல்வி எப்பொழுதும் பாதுகாப்பு தரும் எனத் திருவள்ளுவர் கூறுகிறார். கல்வியின் பயன் ஒருமுறையின்றித் தொடர்ந்து பயன் தரும்; ஆதலின் ஆட்சியாளர்கள் கல்வியில் சிறந்திருக்க வேண்டும் என்பது அரசறிவியல் கருத்து. குறள்நெறிச் செம்மல் பேரா.சி இலக்குவனார், எழுமை=மிகுதி எனப் பொருளைக் கையாண்டு சிறப்பாகவும் சரியாகவும் உரை எழுதியுள்ளார். உரையாசிரியர்கள் சிலர் ஒருமை என்பதற்கு ஒரு பிறப்பு என்றும் எழுமை…