(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.26.தொடர்ச்சி)   மெய்யறம் மாணவரியல் 27. ஒழுக்க முடைமை ஒழுக்க மென்ப துயர்ந்தோர் நடையே. ஒழுக்கம் என்பது உயர்ந்த மனிதர்களின் குணநலன் ஆகும். அருளறி வமைந்தவை யாள்பவ ருயர்ந்தோர். அன்பும் அறிவும் அமைந்து அவற்றைச் செயலிலும் காட்டுபவர்கள் உயர்ந்த மனிதர்கள் ஆவர். அவர்நடை பெரியோர்க் கடங்கி யொழுகல். பெரியவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவர்களது நல்லியல்பு ஆகும். இருக்கை யெழுத லெதிர்பின் செல்லல். பெரியவர்களைக் கண்டதும் இருக்கை விட்டெழுதலும் அவர்கள்பின் சென்று வழியனுப்புதலும் நல்லொழுக்கம் ஆகும். நினைவுஞ் சொல்லும் வினையுமொன் றாக்கல்….