ஓகக் கல்வி(யோகா) என்ற பெயரால் பள்ளிகளை ஆரியமயமாக்குவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் அறிக்கை! கல்வியாளர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட பா.ச.க. அரசின் ‘தேசியக் கல்விக் கொள்கை’யின் பரிந்துரைகளைத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முந்திக் கொண்டு ஒவ்வொன்றாகச் செயல்படுத்தி வருகிறது. ஐந்தாம் வகுப்பு – எட்டாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, மாணவர்கள் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளை மூடுவது, ஒரு மேனிலைப் பள்ளிக்கு அருகில் சில அயிரைப்பேரடி(கிலோ மீட்டர்கள்) தொலைவு வரையிலுள்ள தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி…