கண்ணீர்ப் பொங்கல்! துளைக்க வரும் துப்பாக்கிக் குண்டு கண்டும்       துணிந்தெதிர்த்தார் அஞ்சவிலை ஈழ நாட்டார் வளைக்கவரும் படைகண்டும் கலங்க வில்லை       வரிப்புலியாய்ப் பாய்ந்தெதிர்த்து வாகை கொண்டார் அழைத்தபடை அரவணைக்கும் என்று நின்றார்;       அமைதியெனும் பெயராலே குண்டு வீசித் தொலைக்கவரும் நிலைகண்டே மயங்கு கின்றார்;       தோழமையே பகையானால் என்ன செய்வார்? சிங்களத்துக் கொடுங்கோலால் அடிமை யாகிச்       சிக்குண்டு நலிந்துருகிப் பின்நி மிர்ந்து வெங்களத்தில் வரும்விடியல் எனநி னைந்து       வேங்கையெனச் சினந்தெழுந்து போர்தொ டுத்தார் தங்குலத்தோர் விழியிழந்தும் உயிரி ழந்தும்       தையலர்தம் கற்பிழந்தும் தயங்கா ராகித் தங்குறிக்கோள்…