கசங்கிய காகிதங்களின் கருணைமனு   நகர நரகத்தில் கைவிடப்பட்ட கட்டடங்களாய், தூய்மையையே காணாத கழிவறைகளாய், தூய்மை இந்தியாவில் நாங்கள்!   நகரத் திராணியற்ற நத்தையின் முதுகில் நான்காயிரம் பலமேற்றியதில் கல்வி வண்டி கவிழ்ந்தது எங்கள்மேல்தான்!   அந்த இண்டு இடுக்கில் எட்டிப்பார்த்தவேளையில் காலைத் திணிக்க இரண்டுறைகள் நூல்களைத் திணிக்கப் பையுறை உங்கள் விருப்பத்தைத் திணிக்க நாங்கள் எங்களைத் திணிக்கப் பள்ளி உந்துகள் கழுத்துக்குக் கோவணம் மாட்டி மூளையை அம்மணமாக்கினீர்கள்!   எங்கள் நாக்கைக் கசக்கியதில் நாண்டுகொண்டது எங்கள் மொழி!   பள்ளிக்கழிவறையில் பதைத்துச் செத்தது…