அன்றாடம் அதிகாலையில் எழுந்து இரவு வரை ஆங்கில வழிக்கல்வி, பள்ளியில் படிப்புச்சுமை அதன் பின்னர் சிறப்பு வகுப்பு; பெற்றோரின் தூண்டுதலால் தற்காப்புக்கலை(கராத்தே), ஒத்தியம்(ஆர்மோனியம்), நாட்டியம், பரதம், காணொளி ஆட்டங்கள் எனக் கசக்கிப்பிழியப்படல்: வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை விட்டால் கூடச் சிறப்புப் பயிற்சி வகுப்பு என மாணவ, மாணவியர்களுக்கு அடுக்கடுக்கான வேலைகள். இதற்கிடையில் என்றாவது ஒரு நாள் விடுமுறை விட்டால் கூடப் பண்டைய காலத்தில் விளையாடிய கோலிக்குண்டு, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கிட்டிப்புள், மணல் விளையாட்டு, சடுகுடு, நீச்சல் போன்ற எந்த…