அரசின் கல்விக்கொள்கை இலெனின்கள் உயிர்களைப் பறிக்கின்றது! உள்ளம் தவிக்கின்றது!   அனைவருக்கும் கல்வி தருவது  அரசின்  கடமை. ஆனால், கல்வி வணிகமயமாக்கப்பட்டதால் கற்போர் பெரும்பாடு படவேண்டியுள்ளது. பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் என்கிறார் பாரதியார். ஆனால் பாரை உயர்த்துவதாகக் கூறும் அரசாங்கங்கள், கட்டணமில்லாக் கல்வியைத் தர மறுக்கின்றனவே! கல்லா ஒருவரைக் காணின்  கல்வி நல்காக் கசடர்க்குத்  தூக்குமரம் அங்கே உண்டாம்  எனக் கனவு கண்டார் பாரதிதாசன். ஆனால், கல்வியை வணிகக் கொள்ளையரிடம் ஒப்படைத்துவிட்டுக், கற்பவர்க்குத் தூக்குமரத்தைக் காட்டுகின்றனரே!…