ஒரு காலத்தில் தமிழ்ப் பெயர்களை வடமொழிப் பெயராக ஆக்கும் இயக்கம் மும்முரமாக நடைபெற்றிருக்கிறது என்பது தெரியவருகிறது.   சைவ வைணவ ஆசிரியர்கள் காலத்தில் நமது திருக்கோயில்கள் தமிழ்ப் பெயராலேயே அழைக்கப்பட்டன. அவை வடமொழிப் பெயர்களாக மாற்றப்பட்டன. திருமரைக்காடு – வேதாரண்யம் என்றும் திருவெண்காடு, ‘சுவேதாரண்யம்’ எனவும் திருவையாறு ‘பஞ்சநதித் தலமாகவும்’ மாறியது.   சில மொழி பெயர்ப்புகள் மூலம் வடமொழியினரின் அறியாமையையும் நாம் தெரிந்து கொள்ளலாம். ‘அஞ்சல் நாயகி’ என்னும் அம்பாளுக்கு ‘அபயாம்பிகை’ என்ற பெயர் வடமொழியில் ஏற்பட்டுள்ளது. அஞ்சல் நாயகி…