காட்சிப்பொருளல்ல நீ!   ஆவலாய்ச் சுற்றி வரும் வண்டுகள். பெண்ணே! காவலாய் உரோசாவைச் சுற்றியெழும்  முட்களாய் பாவையே! பார்த்திடு! பதம்  பார்த்திடு! ஆவியில் வீரம் விளையப் பூத்திரு!   பாதகம் செய்பவரை மோதி மிதித்து விடு! காதகர் பேசிடும் சாதகப் பேச்சுகளைத்  தீயிலிடு!    மாதர்தம்மை  இழிவுசெய்யும் மடமையைக்   கொளுத்தி விடு! ஆதவனாய்  ஆர்த்தெழு! வேதனையை  ஒதுக்கிவிடு!   பாரதம் கொண்டதொரு பாரம்பரியம்  போற்றிவிடு! வேரதாய்  விளங்கும் வேலியாம் அடக்கம் காத்திடு!   போடுகின்ற உடைகண்டு போற்றவேண்டும் யாவரும்! பீடுநடை  தான்கொண்டால் போற்றிடுவார்  புலவரும்!…