வள்ளுவத்தில் காப்பீட்டுக்கொள்கை   வள்ளுவம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. காப்பீடு 1800 களில் முகிழ்த்த ஒரு பொருளாதாரக்கோட்பாடு. வள்ளுவம் படித்த பிறகு “வேறொருவர் வாய்க்கேட்க நூல் உளவோ” என்றும் “எல்லாக்கருத்தும் இதன்பால் உள” என்றும் திருவள்ளுவமாலை கூறுவதால் காப்பீட்டுக் கொள்கைகளை வள்ளுவத்தில் தேடிப்பார்த்ததில் விளைந்தது இப்பதிவு. காப்பீடு:   காப்பீடு ஒரு பொருளாதார ஏற்பாடாகும். மனிதன் ஒரு பொருள் ஈட்டுகிற சொத்து(Income generating Asset) எனக் கொள்ளலாம். அந்த பொருள் ஈட்டுகிற திறன் சந்திக்கிற இடர்ப்பாடுகள் இரண்டு. அதாவது வாழ்வு சார்ந்த இரண்டு இடர்களால்…