துடித்தேன்! வடித்தேன்! காலடிச் சுவடுகள் பதிப்பேன்!   வானத்தில் உலவிடும் வண்ணமலர் நிலவைநான் வடித்திட எழுதுகோல் பிடித்தேன் – புது வரிகளை வேண்டிநாள் துடித்தேன் – ஆனால் வானமே கூரையாய் வாழ்ந்திடும் எளியவர் வாழ்க்கையைக் கவிதையில் வடித்தேன் – அவர் நிலைகண்டு கண்ணீரை வடித்தேன்! – அந்த நிலவினைப் பாடநான் நினைத்தேன் – நாட்டு நிலைமையைப் பாடிநான் முடித்தேன் – இது நான்செய்த தவறாகுமா? – இல்லை நான்கற்ற முறையாகுமா? காதலின் இலக்கணம் கண்டவர் வாழ்க்கையைப் படைத்திட எழுதுகோல் பிடித்தேன் – புதுப் பாடல்கள்…