சிற்சபேசன் என்னும் சிரிப்பலை ஓய்ந்தது!

பட்டிமன்ற முன்னோடி, நயத்தக்க நகைச்சுவைக்குப் பலருக்கு ஆசானாக விளங்கிய சிறந்த சொற்பொழிவாளர், மேலாண்மை வல்லுநர், பேராசிரியர் முனைவர் திரு. கண. சிற்சபேசன் அவர்கள் இன்று – சித்திரை 04, 2053 / ஏப்பிரல் 17, 2022 – காலை 10.15 மணி அளவில் காலமானர்கள். குடும்பத்தினரின் ஆழ்ந்த துயரத்தில் அகரமுதல மின்னிதழ், தமிழ்க்காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் பங்கேற்கின்றன.

பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் கௌதமன் காலமானார்

முன்னாள் முதல்வர்  பேரறிஞர் அண்ணா(துரை) அவர்களின்  வளர்ப்பு மகன் கா.ந.அ. கௌதமன் சென்னையில் காலமானார். அவருக்கு  அகவை 67.  இவரது மனைவி துளசி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், சென்னை செனாய் நகரில் உள்ள மகள் சரிதா வீட்டில் கௌதமன் வசித்து வந்தார். அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை அவரது உடல்நிலை மோசமானது. இந்நிலையில், இன்று 29.12.13 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கௌதமன் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். செனாய் நகர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கௌதமன் உடலுக்குத்…