நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றும் உரைக்கும் சட்டமன்றங்களில் ஆளுநர்கள் ஆற்றும் உரைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அது குறித்து வாதங்கள் நடந்து நிறைவேற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆங்கிலேயர் காலத்தில் இங்கிலாந்து பேரரசி சார்பில் ஆளுநர்கள் உரையாற்றிய பொழுது நம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் இத்தீர்மானம் இருந்துள்ளது. அவர்களை வானத்திலிருந்து வந்தவர்களாக எண்ணி மகிழ்ந்து நன்றி தெரிவித்து உள்ளோம்.   உண்மையில் குடியரசுத் தலைவர் உரையும் மாநில ஆளுநர்கள் உரைகளும் உரிய அரசுகளால்  எழுதித் தரப்படுவனவே!  அரசுகளின் உரைகள் என்றால் அவை…