நமக்குத் தேவை மனிதநேயக்கல்வியே!   சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 422)   மனம்போன போக்கில் செல்லாமல் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயனவற்றை விலக்கி, நல்லனவற்றின்பால் கருத்து செலுத்தச் செய்வதே அறிவு என்கிறார் திருவள்ளுவர். பழியும் பாவமும் பொருள்கேடும் வராமல்  நன்மைப்பக்கம் செலுத்துவதே அறிவு என மணக்குடவர் விளக்குகிறார். எனவேதான், மனம்போன போக்கெல்லாம் போக வேண்டா (உலகநாதர் : உலகநீதி  3.1) என்று உலகநாதர் கூறியுள்ளார். இத்தகைய அறிவை நமக்குத் தருவதுதான் கல்வி.   “கற்றது கைம்மண்…